மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், ஆறு மணி நேரங்களாக 175 மைல் தூரம் கடந்து ஸ்காட்லாந்தின் நாட்டின் தலைநகரான எடின்பர்க் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வழி எங்கும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையாக வரிசையில் காத்திருந்து மகாராணியாரின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.