Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

Breaking: ராணி எலிசபத் காலமானார்…!!

பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன.  இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் சென்று ஆசி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ராணி அவர்களுடைய உடல்நிலை பொருத்தவரையில் கவலைக்கிடமாக இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதோடு, மருத்துவ குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்  வெளியாகி இருந்தது.

மூத்த மருத்துவர்கள் பலர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவருடைய உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் கொண்டு வருவதற்கான முயற்சியிலே மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களுடைய அரண்மனையில் இருந்து தற்போது வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய செய்தி குறிப்பில், நெருங்கிய உறவினர்கள் உடனடியாக அரண்மனைக்கு வருவதற்கான அழைப்பு என்பது விடுக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |