Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரியின் இரண்டாவது குழந்தை!”.. மகிழ்ச்சியில் திளைக்கும் அரச குடும்பம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக மகள் பிறந்த செய்தியை அறிந்த அரச குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி அன்று இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கு ஹரி, மேகன் இருவரும் “Lilibet Diana” என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பிரிட்டன் மகாராணியாரான, இரண்டாம் எலிசபெத்தின் புனைப் பெயர் Lilibet மற்றும் ஹரியின் தாயான, இளவரசி டயானாவை கௌரவப்படுத்தும் விதமாக “Diana” என்றும் பெயர் சூட்டியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹரி மேகன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் ராஜ குடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிந்து உற்சாகமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இளவரசர் ஹரியின் சகோதரரான இளவரசர் வில்லியம், மற்றும் அவரின் மனைவி கேட் மிடில்டன் இருவரும், “குழந்தை lili-யின் வரவால், மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். ஹரி மேகன் மற்றும் ஆர்ச்சிக்கு எங்களது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |