கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என மனிதவள மேம்பாடு மற்றும் மக்கள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கூட்டாட்சி விதி எண் 8 அடிப்படையில் ஊழியர்கள் எடுத்திருக்கும் இந்த விடுப்பு மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த விதியின் படி ஊழியர்களின் பணி ஒப்பந்த காலத்திற்கு ஏற்றவாறு அல்லது ஒரு வருடத்திற்குள் தொடர்ச்சியாக அல்லது இடைவெளிவிட்டு 90 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைப்படி ஊதியம் வழங்க வேண்டும்.
முதல் பதினைந்து நாட்கள் விடுப்புடன் கூடிய சம்பளம்.
அடுத்த ஒரு மாதத்தில் பாதி அளவு ஊதியம் விடுப்பு.
அதற்கும் மேற்பட்ட நாட்களுக்கு ஊதியமில்லா விடுப்பு அளிக்க வேண்டும்.
கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது. அதோடு தனியார் நிறுவனங்கள் கொரோனா விவகாரத்தில் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியங்கள், முழு நேரம் அல்லது பகுதி நேர ஊழியர்களின் விடுப்பு நாட்கள் மற்றும் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட சம்பளக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை சரியாக முறைப்படி அந்நிறுவனங்கள் ஆவணப்படுத்த வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.