தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியானது.
தமன் இசையில் விஜய் மற்றும் மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் சிலர் மொச்சைக்கொட்டை பல்லழகி என்ற பாடலின் காப்பி தான் என்று ரஞ்சிதமே பாடலை விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் விமர்சனங்களை தாண்டி தற்போது ரஞ்சிதமே பாடல் 13 நாடுகளில் சாதனை படைத்துள்ளது. அதாவது 13 நாடுகளில் ரஞ்சிதமே பாடலின் மியூசிக் மற்றும் பாடல் வரிகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் இது தொடர்பான தகவல் புகைப்படத்துடன் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.