ரஷ்யா, பெலாரஸ் நாட்டின் மூலம் உக்ரைன் நாட்டிற்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புடினும், பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது பெலாரஸும் போர் தொடுக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போது, பெலாரஸின் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல் மேற்கொண்டுள்ளன. எனவே, உக்ரைன் பாதுகாப்பு மந்திரி, பெலாரஸ் நாட்டின் போர் விமானங்களை அனுப்பி எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
ரஷ்ய அதிபர் உடனான சந்திப்பின் போது, பெலாரஸ் நாட்டின் அதிபரான லுகாஷென்கோ, பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, உக்ரைன் டான்போஸ் மட்டுமல்லாமல், பெலாரஸ் நாட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டமிட்ட வரைபடங்கள் எங்களிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.