Categories
உலக செய்திகள்

புடின் ஹிஸ்ட்லரை விட கொடியவர்… போலந்து பிரதமர் அதிரடி…!!!

போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது.

அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் இருக்கும் வீதிகளில் அப்பாவி பொது மக்களின் ரத்தம் ஓடுகிறது. இந்த சம்பவங்கள், ஹிட்லர் மற்றும் ஸ்டாலினுடைய சபிக்கப்பட்ட வரலாறு திரும்புவதை காட்டுகிறது.

ரஷ்யப் படைகள், கீவ் நகரில் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை. எனவே, நம் ஆன்மா, சுதந்திரம் மற்றும் இறையாண்மையை இழந்துவிடுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |