அனுமதியுடன் வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவீர்கள் என புதுச்சேரி மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு அனுமதியுடன் மக்கள் சென்று வந்தாலும்,
மாநிலத்தில் நுழைந்தவுடன் அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கோடைகாலம் என்பதால் ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் அலுவலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதாகவும்,
வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன்களை அளித்து சுமார் ரூபாய் பத்தாயிரம் நிதி உதவிகளை பெண்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புகளுக்கு பல்வேறு வகையில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.