Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 25 நாட்களில்…. புதுமண தம்பதிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் விவசாயியான முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வேன், மினிலாரி ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேஷ்மா என்ற மகள் உள்ளார். இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிர் வீட்டில் வசித்த உறவினரான கூலித் தொழிலாளியான மாணிக்கராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் முத்துக்குட்டி தனது மகளுக்கு மற்றொரு வரன் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் 29-ஆம் தேதி மாணிக்கராஜூம் ரேஷ்மாவும் தங்களது ஊரிலிருந்து வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் மாணிக்கராஜ் காதல் மனைவியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர்கள் மாணிக்கராஜின் பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணிக்கராஜின் தாயார் மகாலட்சுமி ஊரக வேலைக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டில் புதுமண தம்பதி மாணிக்கராஜ் ரேஷ்மா மட்டும் தனியாக இருந்தனர். இதனையடுத்து மகாலட்சுமி மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மகன் மாணிக்கராஜ் மற்றும் மருமகள் ரேஷ்மா 2 பேரும் பலத்த வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எட்டையபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதுமண தம்பதியின் உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முத்துக்குட்டி புதுமணத் தம்பதியை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் பூட்டியிருந்த முத்துக்குட்டியின் வீட்டில் ரத்தக்கறையுடன் இருந்த அரிவாளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் தலைமறைவான முத்துக்குட்டியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |