Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு…. கஜானா காலி…. பிரதமரே எங்க கிட்ட பேசுங்க…. முதல்வர் வேண்டுகோள்…!!

மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமானால்,  அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சீனாவில்  தொடங்கிய கொரோனாவின்  பாதிப்பு உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை ஐரோப்பிய கண்டத்தில் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவானது மே 17ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவிக்கையில், மே 15ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை.கொரோனா  பாதிப்பு கொஞ்சம் கூட குறையாமல் மே 17 க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால்,

அரசாங்கத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்துவிடும். ஏற்கனவே அரசின் கஜானா காலியாகும் நிலையில் உள்ளது. எனவே உடனடியாக பிரதமர் மாநில முதல்வர்களுடன் அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்கு முன் ஆலோசித்து விட்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |