Categories
தேசிய செய்திகள்

‘பிற மாநிலங்களுக்கும் தொடர்பு உண்டு’…. மோசமடையும் காற்று மாசுபாடு…. போக்குவரத்துத்துறை அமைச்சரின் கருத்து….!!

காற்று மாசுபாடனது மிகவும் மோசமாக உள்ளது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலினால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் புதுடெல்லியில் காற்றானது தூய்மையாகவும் ஆறுகளில்  நீரானது தெளிவாகவும்  காணப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலானது குறைந்த பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து காற்று மாசுபாடனது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபடானது புதுடெல்லியில் மிகவும் அபாயகரமாக உள்ளது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதிலும் காற்று தரக்குறியீடு இன்று புதுடெல்லியில் 379 ஆகவுள்ளது. இதனை காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி போக்குவரத்து துறை அமைச்சரான கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். அதில் “காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அண்டை மாநிலங்களும் இதனைத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பிரச்சினையானது டெல்லியை மட்டும் மையப்படுத்தியது அல்ல. இது NCR, அரியானா மற்றும் பிற மாநிலங்களுடனும் தொடர்புடையது. இதனால் அவர்களும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |