பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுமாங்காடு பகுதியில் சிலர் செடி, கொடிகள் நிறைந்த மறைவான புதர் பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர்.
அதில் அவர்கள் கத்தி மற்றும் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கூட்டுசதியில் இவர்கள் ஈடுபட்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் விஜய், வினோத், சதீஷ், ஜெயக்குமார், தினேஷ் மற்றும் கண்ணன் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது பல வழக்குகள் காவல் நிலையங்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.