Categories
உலக செய்திகள்

“புத்தாண்டுக்கு பின்”…. 33,000 விமானங்கள் ரத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஜெர்மனியில் வரும் புத்தாண்டுக்கு பின் சுமார் 33,000 விமானங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாக Lufthansa தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் பரவிவரும் நிலையில் பயணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதால் ஜெர்மனியின் தேசிய விமான நிறுவனமான Lufthansa தனது குளிர்கால விமானத் திட்டத்தை சுமார் 10 சதவிகிதம் குறைக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கார்ஸ்டன் ஸ்போர் (Carsten Spohr) தெரிவித்தார். வருகின்ற ஜனவரி நடுப்பகுதியில் இருந்து பிப்ரவரி வரை முன்பதிவுகளில் கூர்மையான வீழ்ச்சி காணப்படுகிறது.

இதனால் இந்த குளிர்காலத்தில் 33,000 விமானங்கள் அல்லது சுமார் 10 % விமானங்களை ரத்துசெய்ய ஏர்லைன்ஸ் குழு வழிவகுத்தது என்று Frankfurter Allgemeine Sonntagszeitung-க்கு (FAS) அளித்த பேட்டியில் Spohr தெரிவித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் போன்ற எங்கள் சொந்த சந்தைகளில் பயணிகளைக் காணவில்லை. ஏனென்றால் இந்த நாடுகள் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று Spohr கூறினார்.

யூரோவிங்ஸ், ஆஸ்திரியன், சுவிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸை உள்ளடக்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய விமானக் குழுவான Lufthansa, 2019-ஆம் ஆண்டு தொற்று நோய்க்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​தற்போது “சுமார் 60 சதவிகிதம் விமானங்களை இயக்கி வருவதாகவும், எண்ணிக்கையில் தோராயமாக பாதி பயணிகளை மட்டுமே ஏற்றிச் சென்றதாகவும் தலைமை நிர்வாகி Spohr கூறினார். அதேசமயம் உள்நாட்டு விமான சேவைகளின் தேவை மிகவும் வலுவாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |