கிராமிய பாடகரும் பிக்பாஸ் போட்டியாளருமான வேல்முருகன் புத்தாண்டிற்கு புதிய பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார் .
உலகமே நேற்று புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது . இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிராமிய பாடகரும் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளருமான வேல்முருகன் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்துள்ளார் . அவர் புதிய புத்தாண்டு பாடல் ஒன்றை பாடி அந்த பாடலுக்கு அசத்தலாக நடனம் ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஜிகேபி மற்றும் வேல்முருகன் எழுதிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதுவரை கிராமத்து தோற்றத்திலேயே பார்த்த வேல்முருகன் இந்த பாடல் வீடியோவில் மாடல் உடை அணிந்து அசத்தல் நடனமாடியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . இந்தப் பாடலுக்கு வேல் முருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு இணையத்தில் இந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள் .