Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. “பாலிவுட்டில் தடம் பதிக்கும் விக்ரம்”….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த 30-ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்க போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விக்ரம் அலாவுகிக் தேசாய் இயக்கத்தில் ராமாயண கதை ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ராணாவத் நடிக்க இருக்கிறாராம். மேலும் பா. ரஞ்சித்துடனான  படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹிந்தியில் தான் நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங்கில் நடிகர் விக்ரம் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |