Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு! செம மாஸ்…. பாலிவுட்டில் தடம் பதித்த சிம்பு‌…. எந்த படத்தில் தெரியுமா…..? கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். கடந்த சில வருடங்களாக சில பல பிரச்சனைகளில் தவித்து வந்த இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறி வந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் மூலம் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகராக மட்டுமின்றி வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற திரைப்படங்களின் மூலம் சிம்பு இயக்குனராகவும் தடம் பதித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சிம்பு ஒரு சிறந்த பாடகரும் கூட. இவர் சமீபத்தில் பாடிய புல்லட் சாங் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது பாலிவுட் சினிமாவில் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

அதாவது நடிகர் சிம்புவின் நண்பர் மஹத் பாலிவுட் சினிமாவில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி மற்றும் சோனாலி சின்ஹா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தாலி தாலி என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.  நடிகர் சிம்பு தன்னுடைய நண்பருக்காக மட்டும்தான் அப்பாடலை பாடியதாகவும், கண்டிப்பாக என்னுடைய பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பின் படம் வெற்றி பெற பட குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |