Categories
கிரிக்கெட் விளையாட்டு

குழந்தையுடன் குளியல் போடும் ஹர்திக் பாண்டியா…. வெளியான கியூட் போட்டோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்துடன் குளியல் போடும் கியூட் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.  காயத்திற்கு பின்பு ஹார்திக் பாண்டியா இன்னும் முழுமையாக பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி உலகின் மிகப் பெரிய மைதானம் மோதேரா பட்டேல் மைதானத்தில் நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் குடும்பத்துடன் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஹர்திக் பாண்டியா அவரது மகனுடன் உல்லாசமாக குளியல் போடும் போட்டோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |