தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, சாராயத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த அரசு ? தீபாவளிக்கு மூணு நாளைக்கு 650 கோடி ரூபாய்க்கு மேல, சேல்ஸ். அத மானிட்டர் பண்றாங்க. அத பத்தி பேசுறாங்க. அதை பத்தி மூன்று பத்திரிக்கை நண்பர்கள் செய்தி போட்டு இருந்தாங்க.. தமிழ்நாட்டுல டாஸ்மார்க்கில் இவ்வளவு சேல்ஸ் ஆயிருக்கு என.. இந்த கோயம்புத்தூர் வெடிகுண்டு விபத்து என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அது அனைவருக்குமே தெரியும் தற்கொலை படை தாக்குதல் என்று…
அதைக் கூட பேச மறுக்கக்கூடிய சாராய அமைச்சர், உடனடியாக அந்த மூன்று பத்திரிகையாளரை மிரட்டுகின்றார். நாங்கள் சும்மா விட மாட்டோம் என மிரட்டுகின்றார். அதுல ஆளுங்கட்சியை சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் போட்டாங்க, அவங்களுக்கு மிரட்டல் கிடையாது. ஆளுங்கட்சியை சாராத ரெண்டு நண்பர்கள் போட்டாங்க, அவங்களுக்கு மிரட்டல்.
அதனாலதான் நம்முடைய சாராய அமைச்சருக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகின்றோம். சாராயம் வித்து பொழப்பு நடக்கிற உங்களுக்கே இவ்வளவு இருந்தா ? மாத சம்பளம் வாங்கி, நேர்மையாக ஒரு பைக்ல வந்து வெயில் நின்று, நியூஸ் சேகரித்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய நெஞ்சுரம்மிக்க நம்முடைய சகோதரர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு, எவ்வளவு இருக்கும். சாராயத்தை வித்து, கமிஷனை வாங்கி, பிழைப்பு நடத்தக்கூடிய ஒரு அமைச்சருக்கு இவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்னா?
உங்களுக்கு எவ்வளவு இருக்கும் ? அதைத்தான் நான் ஒரு பதிவாக போட்டிருந்தேன். அதனால் நீங்க எந்த பத்திரிகையாளர் மீது கேஸ் போடணும்னா.. அந்த கேஸை எங்க மேல போடுங்க. நீங்க சாராயத்தை விற்க வேண்டும் என்று கவனம் கொடுத்ததுனால, தற்கொலை படை தாக்குதலை கோட்டை விட்டீர்கள். இது உண்மைதான் என தெரிவித்தார்.