நடிகை ஜெனிலியா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இன்னும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாய்ஸ், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து, இவர் நடிப்பதை நிறுத்தி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில், பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இவர் புதிதாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பூஜையின் போது பேசிய நடிகை ஜெனிலியா, ”படங்களில் நடிப்பதை நிறுத்தி பத்து வருடத்திற்கு மேலாகிறது. இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்” என கூறியுள்ளார். பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.