கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது மிகவும் சிறப்பு. கதையை படித்தவர்கள் திரைப்படத்தை எளிதாக புரிந்து கொள்வார்கள். அதோடு கல்கியின் நாவலை காவியமாகவும் கருதுவார்கள்.
பாகுபலி பெரிதா பொன்னியின் செல்வன் பெரிதா என்ற போட்டியை வேண்டாம். எல்லா காவியத்தையும் ரசிகர்கள் ரசிக்கலாம். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு அடையாளம் தான் பொன்னியின் செல்வன். வெளிநாட்டு மக்களுக்கு தாஜ்மஹாலை காண்பிப்பதை விட சோழநாடு எப்படி இருந்தது என்பதை காண்பிப்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம். இந்த படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேர்ந்து நடித்ததால் மிஸ்டர் மெட்ராஸ் என்று பெருமை கொள்கிறேன். பொதுமக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். ஓரிரு மாதங்களில் அரசியல் குறித்து வியூகம் செய்ய இருக்கிறேன். மேலும் இந்தத் திட்டத்தை வகுத்தால் மக்களுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்று கூறினார்.