Categories
உலக செய்திகள்

“ஊதா நிறத்தில் சிறுநீர் வருகிறதா”…? அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்…. தெரிந்து கொள்வோமா…!!

பெண் ஒருவருக்கு சிறு நீர் ஊதா நிறத்தில் வருகிறதாம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேறியதாம். இதற்கு காரணம் அவர் சிறுநீர் வடிகுழாய் உபகரணம் செலுத்தியதே என்று தெரியவந்துள்ளது. இத்தகைய பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று பிரச்சனைகள் குறித்து இதில் பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 70 வயது பெண் சில நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வருகிறார். ஏனெனில் அவருக்கு சிறு நீர் ஊதா நிறத்தில் வருகிறதாம். காரணம் தெரியாமல் உலகம் முழுவதும் பிரபலமான இவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் குழம்பினர். பின்னர் இதற்கும் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டது. பெண்மணிக்கு சிறுநீர் பாதிப்பு இருந்ததன் காரணத்தினால் அவர் தன் உடலில் urinary catheter எனப்படும் சிறுநீர் வடிகுழாய் பொருத்தியிருக்கிறார்.

பத்து நாட்களுக்குப் பிறகு அவரது சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேற தொடங்கியுள்ளது. urinary catheter பொறுத்தியதால் அதில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீர்ப் பாதையில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் காரம் அதிகம் கொண்ட சூழலில் காரணமாக வேதனையாக ஏற்பட்டு ஊதா நிறத்தில் வெளியேறியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த பெண்ணிற்கு ஆல்கலைன் சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட ரசாயன பொருள்களுடன் வேதி வினை புரியாத நாளில் சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேறியதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊதா நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. ஆபத்தானதும் கூட, சிறுநீர்ப்பாதையில் பாதிப்பு கொண்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக urinary catheter  பொருத்தப்படுகிறது. இந்த உபகரணம் எத்தனை நாட்கள் அவரது உடலில் இருக்கிறது என்பதை பொருட்டு அவரது சிறுநீர் ஊதா நிறத்தில் வெளியேறும் நிகழ்வு அமைந்து இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |