புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் புயலில் இறந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று நிவாரண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணியை தீவிரப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடலூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு அமைச்சர் காமராஜ் மற்றும் கேபி அன்பழகன் நியமித்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதிக்கு அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கரையும், சென்னைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாண்டிராஜ் நியமித்துள்ளனர். இன்று காலை முதல்வர் அதிகாரிகளுடன் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.