Categories
தேசிய செய்திகள்

புறநோயாளிகளின் நீண்ட நாள் கவலை….. எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் தொடர்ச்சியாக வைத்த வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகளை அழைத்துச் செல்ல கூடுதலாக 50 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு அங்கேயே நுழைவு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |