மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மரில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி உட்பட பல அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது.
எனவே மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனை தடுப்பதற்காக ராணுவம் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதில் தற்போதுவரை 1200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
இதனிடையே ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் அவைத் தலைவர் மற்றும் எம்பியாக இருக்கும் ஆங் சான் சூகியின் உதவியாளர் வின் ஹிடினை, இராணுவத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று கைது செய்திருந்தனர். அதன்பின்பு, வின் ஹிடின் மேல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது அதில் வின்சியின் தேசத்துரோகி செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது