Categories
சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமாரின் ”கந்தாட குடி”…. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் தனது 46 வது வயதில் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கந்தாட குடி’. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த பொழுது இவர் மரணமடைந்தார். இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முடித்துள்ளனர்.

இதனயடுத்து, இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தின் இயற்கை வளத்தை பாதுகாப்பது பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என புனித் ராஜ்குமார் விரும்பியுள்ளார். இதனை அவரின் மனைவி தெரிவித்திருந்தார்.

இந்த தகவலை அறிந்த மோடி படத்தின் டீசரை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் ‘புத்திசாலித்தனமான ஆளுமை, ஆற்றல் நிறைந்தவர். ‘கந்தாட குடி’ என்பது கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு காணிக்கையாகும்’. என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |