Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியான முறையில் நடக்கல…. குடிநீர் வழங்குவதில் தடை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பாண்டூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூ செலவில் மின் மோட்டார் அறை மற்றும் திறந்தவெளியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றின் இருந்து  தினசரி ஆம்பூர் பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த கிணறு திடீரென்று பூமிக்குள் உள்வாங்கி புதைந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாண்டூர் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கிணறு அமைக்கும் போது அதிகாரிகள் சரியான முறையில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாததால் தற்போது கிணறு பூமிக்குள் புதைந்து இருக்கின்றது. எனவே இனி வரக்கூடிய காலங்களில் ஊராட்சிகளில் இது போன்ற பணிகள் நடைபெறும் போது அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பணிகள் சிறந்த முறையில் நடை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |