Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை வைத்து நடக்கும் வாக்கு சேகரிப்பை நிறுத்த வேண்டும் “மோடிக்கு வைக்கோ எச்சரிக்கை !!!..

இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் 

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ அவர்கள் பிரச்சாரம்  மேற்கொண்டார் அந்த பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,

மக்களின் பேராதரவு பெற்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திமுகவின் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்த இடத்தில் தற்போது மு க ஸ்டாலின் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று அதனை நிர்வகித்து வருகிறார் தமிழகத்தில் இனிவரும் ஆட்சிக் காலங்களில் நல்லாட்சி அமைக்க ஸ்டாலின் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது உரையை ஆரம்பித்தார்

மேலும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய மோடி அவர்கள் இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதல் சம்பவத்தை முன்வைத்து வாக்குறுதிகளை சேகரித்து வருகிறார் பொதுவாக இந்திய ராணுவம் எந்த கட்சிக்கும் எந்தத் தனிப்பட்ட நபருக்கும் சொந்தமில்லை இந்திய ராணுவம் இந்திய நாட்டிற்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது ஆகையால் இந்திய இராணுவத்தின் பெயரைச் சொல்லி மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பது இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ அவர்கள் பேசினார்

இதனை அடுத்து தமிழகத்தில் எட்டு வழி சாலை கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு உதவுதல் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது இந்த திட்டங்களை எல்லாம் மாநில ஆட்சிகளே முடிவு செய்து அதிக அளவு தீங்கு விளைவிக்கும் பட்சத்தில் ரத்து செய்ய முடியும் ஆனால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய மத்திய அரசும் மாநில அரசும் இதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததில்லை

ஆகவே மாற்றம் உண்டாகி மட்டுமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் ஆகவே மு க ஸ்டாலின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து மிகப்பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்

Categories

Tech |