புலி இடம்பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோழி கண்டி பகுதியில் 18-ஆவது நாளாக வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோழி கண்டியிலிருந்து ஓம்பெட்டா வனப்பகுதிக்கு புலி இடம் பெயர்ந்து விட்டது. இதனால் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக வனப்பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து புலி இடம்பெயர்ந்து வருவதால் முதுமலை, மசினகுடி, ஸ்ரீ மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.