Categories
உலக செய்திகள்

கடத்தப்பட்ட புலம்பெயர்வோர்கள் …. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கிய கும்பல்….!!

சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்வோரை படகில் வைத்து கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெல்ஜியத்தில் இருந்து பிரித்தானியாவிற்குள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி  Svanic என்ற மீன்பிடி படகு ஒன்று வடகடல் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. அதிலும் 60 ஆண்டுகள் பழமையான அந்த படகானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் அல்பேனிய நாட்டைச் சேர்ந்த 69 புலம்பெயர்வோர்கள் மற்றும் படகை ஓட்டுபவர் என மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர்.

மேலும் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதிலிருந்து தப்புவதற்காக அவசரகால படகு ஒன்றும் 2௦ உயிர் கவசங்களும் இருந்தன. குறிப்பாக மோசமான நிலையில் இருக்கும் படகில் பயணிகளை வைத்து இயக்கியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த Arturas என்பவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவர்களின் உரையாடலில், வாரம் ஒன்றிற்கு 50 புலம்பெயர்வோரை கடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக பெருமளவில் பணமும் பேசப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக புலம்பெயர்வோரை பிரித்தானியாவிற்குள் கடத்தும் முயற்சியில் மூளையாக செயல்பட்ட Arturasசையும் போலீசார் இதனால் கைது செய்துள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் தொடர்புடைய  5 பேருக்கும்  தண்டனை வழங்கும் தேதியானது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Categories

Tech |