Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் “பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!!…

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி அவர்கள் நடத்தியதாக  பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ம்

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக நான்கு  பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளது . தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.


அவரது மனைவியும், தேமுதிக கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகிறார் . ஆனால் அவர் பிரசாரத்தின்போது  அதிக அளவில் சர்ச்சைகள் உருவாகின்றன

கோவையில் பிரேமலதா பிரசாரத்தில் பேசும்போது, புல்வாமா தாக்குதலை நடத்திய தைரியமிக்க பிரதமர் மோடி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதல் என்பதற்கு பதிலாக மோடி நடத்திய புல்வமா  தாக்குதல் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

pulwama தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து விமானப்படை தாக்குதல் நடத்தியதில் அந்த இடத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக pulwama தாக்குதல் என்றே பிரேமலதா கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
.

Categories

Tech |