சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு காவல்துறையினர் கல்லுப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் புகையிலையை கடத்தி வந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு அவரிடம் இருந்த புகையிலைகள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.