நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள் இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது.
நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் ஒருவர் புகையிலை பயன்படுத்தியவராகவே இருக்கிறார். ஆகையால் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் புகையிலை சிகரெட் போன்ற போதைப்பொருள்கள் இல்லாத நாடாக உருவாக்க இருப்பதாக அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கானா செயல் திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் புகைப்பிடிப்பவர்களின் வயது படிப்படியாக உயர்த்த படுவதாகவும் அதாவது 2004ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் எவரும் புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை செய்வதற்கான தடை விதிக்கபடுவதாகவும் இந்த காலகட்டத்தில் வரும் தலைமுறைகள் புகைப்பிடிப்பது என்பது சட்டவிரோதமான செயல் என்று வலியுறுத்தப்படும். இதனை தொடர்ந்து புகையிலையில் அதிகம் பயன்படுத்தப்படும் நிகோடினின் அளவை குறைக்க வேண்டும்.
மேலும் புகையிலை மற்றும் சிகரெட் போன்ற பொருட்களின் அதற்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று பல திட்டங்கள் இருப்பதாக கூறியுள்ளது. இது குறித்த நியூசிலாந்து இணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால்,நியூசிலாந்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45000 புகையிலை பாதிப்பினாலே இறக்கின்றனர். நியூசிலாந்து மக்களிடையே புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
ஆகையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனை கட்டுப்படுத்தி வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகையில்லா நாடாக மாற்ற வேண்டுமென்றும் அதற்கான வழிமுறைகளை நாம் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த கட்டுப்பாடுகளை பொது சுகாதார அமைப்பும் வலிமொழிகிறது.