Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய டீக்கடைக்காரர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுரை- தூத்துக்குடி பைபாஸ் ரோடு பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திரு.வி.க. நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |