சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது டோனாவூர் செட்டிமேடு பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்ததோடு அவரிடமிருந்த 4 கிலோ 680 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.