Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வடமாநில பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வடமாநில பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்கரை, தேவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக அவினாசி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த காவல்துறையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த பெண் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் ராமச்சந்திரா மொகந்தியின் மனைவி லட்சுமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லட்சுமியை கைது செய்ததோடு அவரிடமிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர்.

Categories

Tech |