Categories
உலக செய்திகள்

ஆப்கனில் நடந்த குண்டுவெடிப்பு…. வெளியாகியுள்ள தீவிரவாதியின் புகைப்படம்…. தகவல் தெரிவித்த ஐ.எஸ் அமைப்பு….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொது மக்களின் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலுள்ள பொதுமக்களும், வெளிநாட்டவர்களும் அங்கிருந்து பிற நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியுள்ளார்கள்.

இதனை சாதமாக பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொதுமக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் தற்போதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு காரணமான நபரின் புகைப்படத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது, தற்கொலை வெடிகுண்டை காபூல் விமான நிலையத்திற்கு கொண்டு சென்ற நபரால் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கும் இடத்திலிருந்து 5 மீட்டர் தொலைவிற்கு வரை செல்ல முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |