இங்கிலாந்து இளவரசியின் கணவர் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது அவருடைய மாமியார் இது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து இளவரசி யூஜீனியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் என்பவர் தீவு ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி அனைவரது மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஜாக் ப்ரூக்ஸின் மாமியார் இந்த புகைப்படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஜாக் Casamigos என்னும் நிறுவனத்தினுடைய அம்பாஸ்டராக உள்ளார். ஆகவே அவர் தன்னுடைய கடமையைத்தான் செய்துள்ளார் என்று இந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் இவர் எப்போதுமே ஒரு வேலையை செய்தால் தன்னை முன்னே நிறுத்திக் கொள்ளாமல் பின்னால் இருந்து செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.