Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு திராவிட மாடல் தேவையில்ல…. நாங்க என்ன வாரிசு அரசியலா பண்றோம்…. CM ஸ்டாலினை சாடிய தமிழிசை….!?!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு கூறினார். அதன்பிறகு கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்பதால் புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம்.

புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எனவே புதுச்சேரியிலும் தற்போது திராவிட மாடல் ஆட்சி தான் தேவைப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக ஆட்சி நடைபெறவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவையில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, நாங்கள் 25 வருடங்களாக உழைத்து மாநில தலைவராக இருந்து ஆட்சிக்கு வழிகாட்டுகிறோம். நாங்கள் வாரிசுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமிழிசை மறைமுகமாக முதல்வர் ஸ்டாலினை தார் விமர்சித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |