புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார் .
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி 245 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 109 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை கொரோனா பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் குறைந்த அளவிலான பரிசித்தனைகளே நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். 100க்கும் குறைவான பரிசோதனைகளை 300ஆக அதிகமாக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் புதுச்சேரி காவல்துறை, பிற துறைகளில் 9 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறையும் வரை ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.