Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் கொரோனா தமிழகத்தில்… அரசு அதிரடி உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து இந்தியா 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 6000 பேர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது ஆகவும் கூறியுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள 104 என்ற இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |