Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விண்ணப்பித்த பொதுமக்கள்… 1,838 பேருக்கு புதிய அட்டைகள்… வழங்கிய மாவட்ட ஆட்சியர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் 1,838 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஸ்மார்ட் கார்டு வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்து ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து 1,838 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் 246, குடவாசலில் 471 பேருக்கும், மன்னார்குடியில் 398 பேருக்கும், கூத்தாநல்லூரில் 93 பேருக்கும், நன்னிலத்தில் 175 பேருக்கும், நீடாமங்கலத்தில் 115 பேருக்கும், திருத்துறைப்பூண்டியில் 313 பேருக்கும், வலங்கைமானில் 27 பேருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் பாலசந்திரன் உட்பட பல அதிகாரிகள் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |