உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு “கோவிட் பாஸ்” சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்பெயினில் கொரோனா தடுப்பூசி கிட்டத்தட்ட 80 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் பேரில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்நாட்டு அரசு “கோவிட் பாஸ்” என்ற சான்றிதழை உணவகம், பார், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது.
இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேரணியாக ஒன்றிணைந்து பில்பாவோ மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.