அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது காக்கா விரட்டியுள்ள சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. அரசியல் அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் தொடங்கலாமா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அவர்களும் சரி என்று கூறியுள்ளனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஏதோ உணர்ந்தவாறு மேலே பார்த்த போது தலைக்கு மேலே காகம் வட்டமடித்து பார்த்துள்ளது.
உடனே அவர் “டேய் போ” என்று விரட்டியுள்ளார். அதை கவனித்த அமைச்சர் ஜெயக்குமார் கைகளை தட்டி தன் பங்கிற்கு விரட்டி விட்டு அதை விடுங்க அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார். அதற்கு செங்கோட்டை சிரித்துவிட்டு “அது உங்களுக்கு இருக்கட்டும் எனக்கு வேண்டாம்” என்று சிரித்து உள்ளார். இதையடுத்து உடன் இருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்துள்ளனர். அதன்பின்னர் சொல்ல வந்ததை சொல்ல, அவரை தொடர்ந்து ஜெயக்குமார் பேசியுள்ளார்.