கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” என்று கூறி பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணியும் , அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் போட்டியிடுகின்றனர். இன்னும் 10 நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் இடைவிடாது பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதையடுத்து இன்று தம்பிதுரை வாக்கு சேகரித்தது செல்லும் போது பொதுமக்கள் சரமாரியாக திட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தை வைரலாகி வருகின்றது.
அப்போது, அங்கே கூடியிருந்த பொதுமக்கள் தண்ணீர் இல்லை எங்கள் ஊருக்கு , ஓட்டு கேட்டு மட்டும் வாரிங்க. நாங்க போட்டோ எடுக்க கூடாது 10 வருடத்துக்கு முன்பு வரீங்க ஓடவோ கேட்க வரீங்க மயிர் “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” இப்போ உங்ககிட்ட தண்ணீர் பிரச்சனை என்று கோரிக்கை வைக்கவில்லை போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம் என்று ஆவேசமாக கூறி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பராபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.