இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நெருக்கடியான நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தனர். அதிபருக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்தாலும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை.
இடைக்கால அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையில் அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். அதுவரை, எங்களின் ஆர்ப்பாட்டம் நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே நாட்டின் நிதி நெருக்கடியும் ஒவ்வொரு நாளும் கடுமையாக மோசமடைந்து வருகிறது.
எனவே, நாட்டில் மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் தொடர்ந்து மூன்று மணி நேரங்கள் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்றிலிருந்து அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.