Categories
தேசிய செய்திகள்

“PUBG பைத்தியம்” துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட….. B.Com மாணவர் பரிதாப மரணம்….!!

பஞ்சாபில் பப்ஜி கேம் விளையாட முடியாததால் B.Com இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த, பிகாம் படித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக உள்ள பப்ஜி கேம்க்கு அடிமையாகி நாள்தோறும் அதனை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்துவதை காட்டிலும், வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்துவதில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் அனைத்தையும் மறந்து அதற்குள் மூழ்கி விடும் வழக்கம் அந்த மாணவனுக்கு இருந்துள்ளது. சில சமயத்தில் பெற்றோர்கள் கூறும் வார்த்தைகளைக் கூட மதிக்காமல் அவன் விளையாடியது பெற்றோர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாள் முழுவதும் PUBG விளையாடியதால் ஆத்திரமடைந்த அவரது தந்தை மகனின் போனை பிடிங்கி கண்டித்து இனி பப்ஜி விளையாட கூடாது என திட்டியுள்ளார். போனையும் திருப்பி தரவில்லை. இதனால் கேம் விளையாட முடியாமல் மன விரக்தி அடைந்த மாணவன் தனது தந்தை வைத்திருந்த பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக இறந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |