Categories
தேசிய செய்திகள்

PUBG கேமிற்காக….. ரூ2,34,000 செலவு செய்து…. தாத்தாவிற்கு அதிர்ச்சி கொடுத்த 15 வயது பேரன்….!!

பப்ஜி கேமிற்காக டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தாத்தாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தாறுமாறாக செலவு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில் பப்ஜி கேமை  இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். Pubg தடைக்கு முன்பாக அந்த கேம் விளையாடுவதற்காக சிறுவர்கள் அலட்சியமான மனநிலையில் லட்சக்கணக்கான ரூபாயை வீணாக செலவு செய்து வந்ததை தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக நாம் தெரிந்து கொண்டு வந்தோம். அந்த வகையில்,

டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் Pubg  விளையாடுவதற்காக தனது தாத்தாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 2.34 லட்சம் செலவு செய்துள்ளான். தனது கணக்கில் ரூபாய் 275 மட்டுமே இருப்பதாக வந்த மெசேஜையடுத்து அவர் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். பின் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பேரன் செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 

Categories

Tech |