இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியைத்த செல்வராகவனிடம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடவுளை மறுக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளராக இருக்கும் ராமசாமியை குறிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதிலளித்தார்.
மேலும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சைக்கோ கதாபாத்திரத்திற்கு ஈ.வே.ரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் வெளிவருவதற்கு முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “அந்த நேர்காணலின்போது கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை.நீங்கள் சுட்டிக்காட்டிய பின்பு தான் புரிகிறது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.
நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்.
— selvaraghavan (@selvaraghavan) March 9, 2021