Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

Image result for பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சைக்கோ கில்லர் கைது ....!!

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு போலீசார் அருணை கைது செய்துள்ளனர். தம்மிடம் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பதாக நம்ப வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்பு, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பின்பு கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார்.

Categories

Tech |