Categories
மாநில செய்திகள்

PSTM Certificate என்றால் என்ன….? எதற்காக உதவும்….? மாணவர்களே கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியில் படித்ததற்கான சான்றிதழ் பெற இசேவை மூலம் விண்ணப்பிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இ சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்ப்பு செய்து சான்று வழங்கப்படும் என்றும் தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாகவே மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்PSTM Certificate என்றால் என்ன….?  என்பது குறித்து பார்க்கலாம் PSTM Certificate Full Form Person Studied In Tamil Medium. அதாவது நீங்கள் தமிழ் வழி கல்வியில் பயின்றதற்கான ஆதாரமாக இந்த சான்றிதழை வாங்க வேண்டும். இதை எதற்கு வாங்க வேண்டும் என்றால் நீங்கள் ஏதேனும் பொதுத்தேர்வு எழுதும்போது அதில் மதிப்பெண்கள் அல்லது Rank List-ல் பின் தங்கியிருந்தால் அப்பொழுது இந்த PSTM Certificate உங்களுக்கு உதவும். ஏனென்றால் தமிழ்நாடு அரசு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தந்துள்ளது.

Categories

Tech |